ஜம்இய்யாவின் மாவட்ட மற்றும் பிராந்தியக் கிளைகளின் இளைஞர் பயிற்றுவிப்பாளர்களுடன் நடைபெற்ற விசேட ZOOM கலந்துரையாடல்

2026 ஜனவரி 26ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரக் குழு மற்றும் ஜம்இய்யாவின் மாவட்ட மற்றும் பிராந்தியக் கிளைகளின் இளைஞர் பயிற்றுவிப்பாளர்கள் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று ZOOM வாயிலாக நடைபெற்றது.

இதில், இளைஞர் விவகாரக் குழுவின் அடுத்த ஆறு மாதங்களுக்கான செயற்றிட்டம் மற்றும் 2026 ரமழானில் முன்னெடுக்கப்படவுள்ள இளைஞர்களுக்கான விசேட செயற்றிட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் ஜம்இய்யாவின் மாவட்ட மற்றும் பிராந்தியக் கிளைகளின் 25 இளைஞர் பயிற்றுவிப்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதில், ஜம்இய்யா சார்பில் இளைஞர் விவகாரப் பிரிவின் தவிசாளர் அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக், பிரிவின் துணை செயலாளர் அஷ்-ஷைக் ஏ.எம்.எம். ஆஸாத் மற்றும் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி க்ராத்தி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

 – ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன