2026 மார்ச் 14ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில் நுவரெலியா, மீபிலிமன்ன ஜுமுஆ பள்ளிவாயல் மஹல்லாவிற்குட்பட்ட இளைஞர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டல் செயலமர்வு குறித்த பள்ளிவாயலில் நடைபெற்றது.
இதன்போது இளைஞர்கள் சமூகத்தில் சிறந்த முன்மாதிரி மிக்கவர்களாக திகழ்வதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டதுடன், நவீன சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வது குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.
இதில் மீபிலிமன்ன மஹல்லாவிற்குட்பட்ட, 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து பயன்பெற்றனர்.
இச்செயலமர்வில், வளவாளராக ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி க்ராத்தி அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.
– ACJU Media –



