நுவரெலியா Keynesia சர்வதேச பாடசாலையில் நடைபெற்ற மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டல் செயலமர்வு

2026 மார்ச் 13ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில் நுவரெலியா, Keynesia சர்வதேச பாடசாலையில் கற்கும் மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டல் செயலமர்வு பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில், மாணவர்கள் – பெற்றோர்கள் – ஆசிரியர்கள் ஆகியோரிடையே ஆரோக்கியமான நல்லுறவை கட்டியெழுப்புவதற்கான வழிவகைகள் குறித்து பல்வேறு விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டதுடன், பரஸ்பர புரிந்துணர்வுக்கான அவசியம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், மாணவர்கள், பெற்றோர்கள் ஆசிரியர்கள் என சுமார் 480க்கும் மேற்பட்டோர் கலந்து பயன்பெற்றனர்.

இதில் வளவாளராக ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி க்ராத்தி அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன