நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில் கற்பிட்டி கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில், நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கற்கும் மாணவர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டல் மற்றும் பெற்றோருக்கான பிள்ளை வளர்ப்பு செயலமர்வு 2026 ஜூன் 14 அன்று கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில், சிறந்த சமுதாய உருவாக்கத்தில் வளரும் தலைமுறையினரின் வகிபாகம் குறித்து தெளிவுபடுத்தப்பட்டதுடன், எதிர்காலத்தில் சிறந்த பண்பாடுள்ள மற்றும் வெற்றிகரமான சமூகமாக நிகழ்வதற்கான சில அடிப்படைகளும் எடுத்துரைக்கப்பட்டன.

அத்தோடு இவ்வாறான ஒரு சிறந்த சமூகத்தை வளர்த்தெடுப்பதில் பெற்றோரின் பங்களிப்பு குறித்து விளக்கமளிக்கப்பட்டதுடன் சிறந்த பிள்ளை வளர்ப்பில் எதிர்நோக்கும் சவால்களை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்தும் தெளிவுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், மாணவர்கள், பெற்றோர்கள் என சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து பயன்பெற்றனர்.

குறித்த நிகழ்வில், ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி வளவாளராக கலந்துகொண்டு விடயங்களை தெளிவுபடுத்தினார்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன