2026 மார்ச் 01ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவாகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில் பெற்றோர்களுக்கான, பிள்ளை வளர்ப்பு தொடர்பிலான வழிகாட்டல் செயலமர்வு கண்டி, யஹலதென்ன பிரதேசத்தில் நடைபெற்றது.
இதில், சிறந்த பிள்ளை வளர்ப்பின் அடிப்படைகள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டதுடன் இஸ்லாம் கூறும் பிள்ளை வளர்ப்பிற்கான வழிகாட்டல்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
இச்செயலமர்வில் யஹலதென்ன பிரதேசத்தில் உள்ள 250க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து பயன்பெறனர்.
இதில், ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி அவர்கள் வளவாளராக கலந்து கொண்டிருந்தார்.
– ACJU Media –



