புளிச்சாக்குளம் பிரதேசத்தில் நடைபெற்ற ‘சிறந்த இளைஞர் சமுதாய உருவாக்கம்’ எனும் தொனிப்பொருளிலான வழிகாட்டல் நிகழ்வுகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவினால் ‘சிறந்த இளைஞர் சமுதாய உருவாக்கம்’ எனும் தொனிப்பொருளிலான பெற்றோர்களுக்கான விசேட வழிகாட்டல் நிகழ்வுகள் 2026 ஆகஸ்ட் 21 அன்று புளிச்சாக்குளம் பிரதேசத்தை மையப்படுத்தி நடத்தப்பட்டன.

புளிச்சாக்குளம் கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் தாராக்குடிவில்லு, அக்கரைவெளி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் சுமார் 300 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து பயன்பெற்றனர்.

இதன்போது, இளம் பராயத்தில் உள்ள பிள்ளைகளோடு பெற்றோர்கள் நடந்துகொள்ள வேண்டிய அணுகுமுறைகள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டதுடன் உடல், உள, ஒழுக்க மற்றும் ஆன்மீக விழுமியங்களில் மேம்பட்ட சமூகமாக அவர்களை கட்டியெழுப்புவதற்கான பொறிமுறைகள் தொடர்பிலும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டன.

அத்தோடு, தற்கால சூழலில் இளம் பராயத்தினரை முறையாக வளர்த்தெடுப்பதில் உள்ள சவால்கள் மற்றும் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான வழிவகைகள் குறித்தும் ஆராயப்பட்டன.

இந்நிகழ்வுகளில், அஷ்-ஷைக் பவாஸ் மற்றும் சகோதரர் ரம்ஸி க்ராத்தி ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு விடயம் குறித்த தெளிவுகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்கினர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன