2026 பெப்ரவரி 14ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில் கேகாலை, தெல்கஹகொட பிரதேசத்தை மையப்படுத்தி பெற்றோர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வொன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில், பெற்றோர்கள் பிள்ளைகளுடன் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்து தெளிவுபடுத்தப்பட்டதுடன் சிறந்த இளைஞர் சமூகத்தை கட்டியெழுப்புவதில் பெற்றோர்களின் பங்களிப்பு பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.
இதில், தெல்கஹகொட ஜுமுஆ மஸ்ஜித் மஹல்லாவிற்குட்பட்ட 50க்கும் மேற்பட்ட பெற்றோர் கலந்து பயன்பெற்றனர்.
குறித்த நிகழ்வில் ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி அவர்கள் வளவாளராக கலந்து கொண்டிருந்தார்.
– ACJU Media –



