கற்பிட்டி பிரதேசக் கிளையின் இளைஞர் பயிற்றுவிப்பாளர்களுக்கான இருநாள் பயிற்சிநெறி

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில் கற்பிட்டி பிரதேசக் கிளையின் இளைஞர் பயிற்றுவிப்பாளர்களுக்கான இருநாள் பயிற்சிநெறியானது 2026 ஜூன் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் ட்ரீம் ஹவுஸ் (Dream House) பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

இதில், இளைஞர்களை வழிநடத்துவத்தின் நுட்பங்கள் மற்றும் முறைமைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதுடன் இதிலுள்ள சவால்களை வெற்றிகரமாக கையாள்வதற்கான பொறிமுறை குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.

இப்பயிற்சிநெறியில், கற்பிட்டி பிரதேசக் கிளையின் சுமார் 20க்கும் மேற்பட்ட ஆலிம்கள் கலந்து பயன் பெற்றனர்.

இதில், ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி க்ராத்தி அவர்கள் வளவாளராக கலந்துகொண்டிருந்தார்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன