2026 பெப்ரவரி 13ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில் இளைஞர்களுக்கான வலுவூட்டல் நிகழ்வு வட்டதெனிய ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.
இதில், சமுதாயத்தில் இளைஞர்களின் முக்கியத்துவம் குறித்து தெளிவுபடுத்தப்பட்டதுடன் மார்க்க ரீதியிலும், கல்வி மற்றும் தொழிற்றுறைகளிலும் இளைஞர்கள் சிறந்து விளங்குவதற்கான அடிப்படைகள் தொடர்பிலும் விளக்கங்கள் வழங்கப்பட்டன.
இதில், வட்டதெனிய ஜுமுஆ பள்ளிவாயல் மஹல்லாவிற்குட்பட்ட சுமார் 80க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து பயன்பெற்றனர்.
இந்நிகழ்வில், வளவாளராக ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி க்ராத்தி அவர்கள் வளவாளராக கலந்து கொண்டிருந்தார்.

– ACJU Media –



