‘சிறந்த பிரஜைகளை உருவாக்குதல்’ எனும் தொனிப்பொருளில் கனேதென்ன ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்ற இளைஞர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டல் நிகழ்வு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில் மாவனெல்ல கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் ‘சிறந்த பிரஜைகளை உருவாக்குதல்’ எனும் தொனிப்பொருளில் இளைஞர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டல் நிகழ்வொன்று 2026 ஜூன் 19 அன்று கனேதென்ன ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

இதில், ஒரு சிறந்த சமுதாய உருவாக்கத்தில் இளைஞர்களின் பங்களிப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்து தெளிவுபடுத்தப்பட்டதுடன் ஒழுக்கமும் பண்பாடும் மிகுந்த மனிதனாக திகழ் இஸ்லாம் கூறும் அடிப்படைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், போதை போன்ற தீய பழக்க வழக்கங்களின் விபரீதம் குறித்த விழிப்புணர்வளிக்கப்பட்டதுடன் இளைஞர்கள் இவ்வாறான தீய விடயங்களில் சிக்காமல் இருப்பதற்கான வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.’

இதில், கனேதென்ன பகுதியை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து பயன்பெற்றனர்.

குறித்த நிகழ்வில், ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப்பிரிவின் ஆளணியினரான சகோதரர் ரம்ஸி க்ராத்தி மற்றும் அஷ்-ஷைக் நுஸ்ரத் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன