அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அஷ்-ஷைக் வை. எல். எம். நவவீ நியமனம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டுள்ள அஷ்-ஷைக் வை. எல். எம். நவவீ அவர்கள், ஜம்இய்யாவின் தலைவர் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் 2026 ஆகஸ்ட் 10ஆம் திகதி உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதன்போது, ஜம்இய்யாவின் தலைவர், உப தலைவர்கள், பொருளாளர், உதவிப் பொதுச் செயலாளர் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் அஷ்-ஷைக் வை. எல். எம். நவவீ அவர்களை வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கட்டமைப்பு, செயற்பாடுகள் மற்றும் அதன் பணிகள் தொடர்பான அறிமுகத்தை வழங்கினார்.

தொடர்ந்து, ஜம்இய்யாவின் உப தலைவர் எம். எச். எம். புர்ஹான் அவர்கள், ஜம்இய்யாவின் பல்வேறு உப பிரிவுகள் மற்றும் அவற்றில் பணியாற்றும் ஆளணியினர் தொடர்பான அறிமுகத்தை வழங்கினார்.

இதன்போது, பிரதம நிறைவேற்று அதிகாரி அவர்களுக்கு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கடந்த 10 வருடகால செயற்பாடுகளை உள்ளடக்கிய செயற்பாட்டறிக்கையின் பிரதியொன்றும் கையளிக்கப்பட்டது.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன