ஜம்இய்யாவின் கொழும்பு மாவட்டக் கிளை மற்றும் பிராந்தியக் கிளைகளுக்கான நிர்வாகக் குழுத் தெரிவுகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்டக் கிளை மற்றும் அம்மாவட்டத்திலுள்ள 06 பிராந்தியக் கிளைகளுக்குமான புதிய நிர்வாகக் குழுத் தெரிவுகள் 2026 நவம்பர் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் ஜம்இய்யாவின் கிளைகள் விவகாரப் பிரிவினால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது, கொழும்பு கிழக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி, கொழும்பு நகர், மட்டக்குளிய மற்றும் கிரேன்ட்பாஸ் ஆகிய பிராந்தியக் கிளைகளுக்கான காரியக்குழுத் தெரிவுகள் நடைபெற்றதுடன் அவற்றிற்கான பதவிதாங்குநர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, மேற்படி பிராந்தியக் கிளைகளில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் ஆகியோருடன் முன்னாள் மாவட்டக் கிளை உறுப்பினர்களும் ஒன்றுதிரட்டப்பட்டு கொழும்பு மாவட்டக் கிளைக்கான நிர்வாகக் குழு மற்றும் அவற்றிற்கான பதவிதங்குநர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

இத்தெரிவுகள் அனைத்தும் ஜம்இய்யாவின் யாப்பு விதிகளுக்கமைய இரகசிய வாக்கெடுப்பின் அடிப்படையில் மிக நேர்த்தியாகவும் முறையாகவும் நடைபெற்றன.

ஜம்இய்யாவின் கிளைகள் விவகாரப் பிரிவின் தவிசாளர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் என்.ரீ.எம். ளஃரீப், ஜம்இய்யாவின் பொருளாளர் அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் சிலரது மேற்பார்வையிலும் ஜம்இய்யாவின் ஆளணியினரது பங்களிப்புடனும் குறித்த தெரிவுகள் சிறப்பாக நடாத்தி முடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன