அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அல்-குர்ஆன் மத்ரஸா விவகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில், மதவாச்சி, நேரியகுளம் அல்-அக்பரிய்யாஹ் மகளிர் அரபுக் கல்லூரியின் ஆலிமாக்களுக்கான ஆரம்பகட்ட அல்-குர்ஆன் கற்பித்தல் பயிற்சிநெறி, 2026 நவம்பர் 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் குறித்த கல்லூரியில் நடைபெற்றது.
இதன்போது, ‘தஜ்தீத்’ முறைமையிலான அல்-குர்ஆன் மத்ரஸா மேலாண்மை, ஆலிமாக்களுக்கான நடத்தை விதிகள், கற்பித்தல் முறைமை, வகுப்பறை முகாமைத்துவம், தஜ்வீத் பாடம், மத்கலுல் குர்ஆன் மற்றும் மஆரிபுல் வஹீ ஆகிய பாடத்திட்டங்களை கற்பிக்கும் முறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து தெளிவான முறையில் விளக்கங்கள் அளிக்கப்பட்டதுடன், இவை குறித்த சந்தேகங்களுக்கும் தெளிவுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், அல்-அக்பரிய்யாஹ் மகளிர் அரபுக் கல்லூரியின் ஆலிமாக்கள் பலரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
இதில், ஜம்இய்யாவின் அல்-குர்ஆன் மத்ரஸா விவகாரப் பிரிவு சார்பில் அஷ்-ஷைக் அஃலம் மற்றும் அப்பிரிவின் பட்டியலிடப்பட்ட பயிற்றுவிப்பாளர்களான அஷ்-ஷைக் அஸ்வர் அலி, அஷ்-ஷைக் ராஷித், அஷ்-ஷைக் பஸால் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு, மேற்படி விடயங்கள் தொடர்பில் விளக்கங்களையும் தெளிவுகளையும் வழங்கினர்.
– ACJU Media –


