அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில், இவ்வருடம் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் மற்றும் ஆளுமை விருத்தி செயலமர்வு 2026 நவம்பர் 15ஆம் திகதி குருநாகல், கிலிம்பொல ரஷீதிய்யா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
உயர்தரப் பரீட்சையைத் தொடர்ந்து, மாணவர்கள் தமது எதிர்காலத்தை நம்பிக்கையுடனும் தெளிவான திட்டமிடலுடனும் அமைத்துக்கொள்வதற்கான வழிகாட்டல்களை வழங்கும் நோக்கில் இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வித் துறைகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன், மாணவர்கள் தமது ஆர்வம், திறமை மற்றும் எதிர்கால திட்டமிடலுக்கு ஏற்ப பொருத்தமான துறைகளை தெரிவுசெய்வது என்பது தொடர்பாகவும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.
மேலும், மாணவர்கள் தமக்கு விருப்பமான துறைகளில் கால்பதிப்பதற்கு முன்னர், அந்தந்தத் துறைகளுக்குத் தேவையான திறன்களையும் ஆளுமைகளையும் வளர்த்துக்கொள்வதன் அவசியம் குறித்தும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இச்செயலமர்வில், கிலிம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த இவ்வருடம் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் பலரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
இந்நிகழ்வில், ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் ஏ.எம்.எம். மபாஹிம் மற்றும் இளைஞர் விவகாரப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி க்ராத்தி ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு, மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பான தெளிவுகளையும் வழிகாட்டல்களையும் மாணவர்களுக்கு வழங்கினர்.


– ACJU Media –


