அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழுவினால் 2026 நவம்பர் 13ஆம் திகதி பேலியகொட, பைத்துல் முகர்ரம் ஜுமுஆ பள்ளிவாயலின் இரண்டாம் மாடியில் தொழுகைக்கான கிப்லா திசை மீளுறுதி செய்யப்பட்டது.
குறித்த பள்ளிவாயல் நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கு அமைவாக இப்பணி முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஜம்இய்யாவின் பிறைக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் ஏ.எம்.எம். மபாஹிம், குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் முஹம்மத் மற்றும் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் ஸபீர் ஆகியோர் கலந்துகொண்டனர்.


– ACJU Media –


