2018.10.09
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
தனது வாழ்வை கல்வி மற்றும் சமூகப் பணிகளில் அமைத்துக் கொண்ட முன்னாள் சட்டமா அதிபரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான முஹம்மத் ஷிப்லி அஸீஸ் அவர்கள் 2018.10.08 அன்று காலமானதையிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது.
முஹம்மத் ஷிப்லி அஸீஸ் அவர்கள் ஜனாதிபதி சட்டத்தரணியாகவும், இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் (BASL) முன்னாள் தலைவராகவும், அரசியலமைப்பு குழுவின் உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார். இலங்கை நீதித்துறை வரலாற்றில் இரண்டாவது முஸ்லிம் சட்டமா அதிபர் என்ற கௌரவமும் இவருக்குண்டு.
பல சந்தர்ப்பங்களில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் இணைந்து செயற்பட்ட இவர் இன்னும் பல சமூக நலச் செயற்பாடுகளில் தன்னை அட்பணித்து செயற்பட்டு வந்துள்ளார். இலங்கை அஹதிய்யா அமைப்பின் தலைவராக பணியாற்றிய இவர் முஸ்ஸிம் விவாவக விவாகரத்து சட்ட திருத்தக் குழுவின் உறுப்பினராக இருந்து இந்நாட்டு முஸ்லிம்களுக்கு பாரிய சேவையாற்றினார்.
அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஜம்இய்யா தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றது. அல்லாஹுத்தஆலா அன்னாரின் பாவங்களை மன்னித்து அன்னாரது நற்கருமங்களைப் பொருந்திக் கொள்வானாக.
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா






