2024.10.03ஆம் திகதி, இலங்கை இராணுவப் படையின் 75ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு கொள்ளுப்பிட்டி ஜுமுஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற இஸ்லாமிய சமய நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் விஷேட அதிதியாக கலந்து கொண்டார்கள்.
குறித்த நிகழ்வில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்ததுடன் ஏனைய இராணுவ உயர் அதிகாரிகள், முஸ்லிம் இராணுவ அதிகாரிகள், கொள்ளுப்பிட்டி ஜுமுஆ பள்ளிவாயிலின் இமாம்கள் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் விஷேட அதிதியாக கலந்துகொண்ட ஜம்இய்யாவின் பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புப் பணியின் முக்கியத்துவங்கள் தொடர்பில் உரை நிகழ்த்தியதோடு இப்பணியில் ஈடுபடுபவர்கள் தூய்மையாகவும் சிறப்பாகவும் செயற்பட அவர்களுக்காக விஷேட துஆ பிரார்த்தனையும் செய்தார்கள்.
– ACJU Media –




