உஸ்தாத்மார்களின் விபரம் திரட்டல்

26.12.2016 (25.03.1438)

உஸ்தாத்மார்களின் விபரம் திரட்டல்

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு!

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பல்வேறு சமூக சேவைகளைப் புரிந்து வருவது தாங்கள் அறிந்ததே. அவ்வகையில் இலங்கை வாழ் ஆலிம்களின் விவகாரங்களைக் கவனிக்கவென ஆலிம்கள் விவகாரக் குழு எனும் ஒரு உப குழு ஆரம்பிக்கப்பட்டு அது பல்வேறு பணிகளைத் திட்டமிட்டு செயற்படுத்தி வருகின்றது.

அக்குழுவின் நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக நாட்டிலுள்ள அரபுக் கல்லூரிகளில் ஷரீஆ அறிவைக் கற்றுக் கொடுத்த, கற்றுக் கொடுக்கக் கூடிய பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக தங்களை அர்ப்பணித்த உஸ்தாத்மார்களின் விபரங்களைத் திரட்டிக் கொண்டிருக்கின்றது.

எனவே இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தைஇன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 05.01.2017 ஆந் திகதிக்கு முன்னர் எமக்கு கிடைக்கும் விதத்தில் நிரப்பி அனுப்புமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

(மேலதிக விபரங்களுக்கு அஷ்ஷைக் என்.எம். சிராஜ் – 0117-490490/ 0773-671159)

வஸ்ஸலாம்.

அஷ்ஷைக் கே. அப்துர் ரஹ்மான் (பஹ்ஜி)
செயலாளர் – ஆலிம்கள் விவகாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன