க.பொ.த. உயர்தரப் பரீட்சையினையிட்டு ஜுமுஆவுடைய நேரத்தை சுருக்கிக் கொள்ளல் சம்பந்தமாக

ACJU/NGS/2024/290

2024.01.04 (1445.06.20)

 

ஜுமுஆவுடைய நேரத்தை சுருக்கிக் கொள்ளல் சம்பந்தமாக

2023ஆம் ஆண்டிற்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று 2024.01.04ஆம் திகதி தொடக்கம் ஜனவரி 31ஆம் திகதி வரை நாடுபூராகவும் நடைபெறவுள்ளது. அதனடிப்படையில் நாளை 05ஆம் திகதி வெள்ளிக்கிழமை தினமாக காணப்படுவதனாலும் ஜுமுஆவுக்குப் பிறகும் பரீட்சைகள் நடைபெறவிருப்பதனாலும் மாணவர்களது செளகரியம் கருதி நாளைய தினம் ஜுமுஆ பிரசங்கம் மற்றும் தொழுகையினை சுருக்கமாக பிற்பகல் 1.00 மணிக்கு முன்னர் முடிவுறும் வகையில் அமைத்துக் கொள்ளுமாறு சகல கதீப்மார்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது.

மேலும் இம்மாத இறுதிவரை பரீட்சைகள் நடைபெறவிருப்பனதால் எதிர்வரக்கூடிய ஜுமுஆ தினங்களிலும் இந்நடைமுறையை கடைப்பிடிக்குமாறு ஜம்இய்யா வேண்டுகோள் விடுக்கிறது.

பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் இப்பரீட்சையினை சிறந்த முறையில் எதிர்கொண்டு அதிசிறந்த சித்திகளைப் பெற எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்பாலிப்பானாக!

 

அஷ்-ஷைக் எம்.ஜே அப்துல் ஹாலிக்
பதில் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்
பதில் பொதுச்செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன