தேசிய வலையமைப்பு செயற்றிட்டத்திற்கமைய கேகாலை மாவட்ட ஜம்இய்யாவினால் கேகாலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் நடாத்தப்பட்ட இஸ்லாமிய விழுமியங்கள் மற்றும் ரமழான் பற்றிய தெளிவூட்டல்கள் வழங்கும் நிகழ்வு

2025.02.25ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் தேசிய வலையமைப்பு செயற்றிட்டத்திற்கமைய கேகாலை மாவட்ட ஜம்இய்யாவினால் இஸ்லாமிய விழுமியங்கள் மற்றும் ரமழான் பற்றிய தெளிவூட்டல்களை வழங்கும் நிகழ்ச்சியொன்று கேகாலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் நடாத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், முக்கியமாக ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகள், வணக்க வழிபாடுகள் குறித்த அறிமுகம் வழங்கப்பட்டதுடன் நோன்பின் மகத்துவம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

இதில், ஜம்இய்யாவின் கேகாலை மாவட்டக் கிளையின் தலைவர், நிர்வாக உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டிருந்ததுடன் ஜம்இய்யாவின் தலைமையகம் சார்பில் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் ஸல்மான், செயலகப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி அஷ்-ஷைக் நுஃமான் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

 

– ACJU Media –

Related Posts

தித்வாப் புயலால் ஏற்பட்ட கடும் மழை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் மரணித்து அடக்கம் செய்யப்பட்டோருக்காக மறைவான ஜனாஸா தொழுகை நிறைவேற்ற விரும்பவோர், அதனை தொழுது கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன