திருகோணமலை சிறீ சண்முகா இந்துக் கல்லூரி ஆசிரியர் திருமதி பாத்திமா பஹ்மிதா ரமீஸ் அவர்களின் ஆடை விவகாரம் தொடர்பில் வெளியிடப்பட்ட நீதிமன்ற தீர்ப்பு சம்பந்தமாக

ACJU/NGS/2023/147

2023.05.25 (1444.11.04)

குறித்த ஆசிரியரின் கலாசார ஆடையான ஹபாயா விவகாரத்தை முன்னிட்டு இந்த நாட்டில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம் பெண்களுடைய அடிப்படை உரிமைக்காகவும் ஆடை சுதந்திரத்திற்காகவும் நீதிமன்றத்தில் 05 வருடங்களாக விவாதித்து இருதரப்பின் நல்லெண்ண அடிப்படையில் குறித்த வழக்கை சுமுகமாக முடிவுக்குக் கொண்டு வந்த குரல் என்ற அமைப்பின் சட்டத்தரணிகள் மற்றும் சிவில் அமைப்புகளுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

அத்துடன் இதற்காக குரல் கொடுத்த, முயற்சிகள் செய்த, அல்லாஹு தஆலாவிடத்தில் குறித்த ஆசிரியைக்காகவும் முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்காகவும் இருகரம் ஏந்திய அனைவருக்கும் அல்லாஹு தஆலா ஈருலகத்திலும் நலவுகளை வழங்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்கிறது.

குறித்த ஆசிரியரின் விடயத்தில் நீதிமன்றம் நாட்டின் யாப்பின் அடிப்படையிலும் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் பிரஜைகளுடைய அடிப்படை மத உரிமைகளை கவனத்தில் கொண்டும் நியாயமாக நடந்துகொண்டமை எமது நாட்டின் நீதித்துறையின் நேர்மையையும் சுயாதீனத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

 

முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன