தற்போதைய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அரபு மத்ரஸாக்கள் தொடர்பான தகவல் திரட்டல் – 2025

2025.12.07
1447.06.15

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அண்மையில் தித்வாப் புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட கடும் மழை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்குகள் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் பேரழிவுகளும் உயிர்சேதங்களும் ஏற்பட்டுள்ளதை நாம் அனைவரும் அறிவோம்.

இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அரபு மத்ரஸாக்களின் தகவல்களை திரட்டும் பணியை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் அரபுக் கல்லூரிகள் பிரிவு, ஜம்இய்யாவின் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகள் ஊடாக முன்னெடுத்து வருகின்றது.

எனவே பாதிக்கப்பட்டுள்ள அரபு மத்ரஸாக்கள்; பின்வரும் படிவத்தை நிரப்பி அனுப்புமாறு அன்பாக வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா நம்மனைவருக்கும் குறிப்பாக அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து இலங்கை வாழ் மக்களுக்கும் செழிப்பான, சுபீட்சமான வாழ்க்கையை ஏற்படுத்துவானாக.

🔸 கீழ் காணும் link கின் ஊடாக உங்களது தகவல்களை நிரப்பவும்
https://forms.gle/g11h4b2n8QwxgBuV8

அஷ்ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக்
தவிசாளர் – அரபுக் கல்லூரிகள் பிரிவு

கலாநிதி அஷ்ஷைக் ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர்
செயலாளர் – அரபுக் கல்லூரிகள் பிரிவு

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன