இவ்வருட அறபா நோன்பு தொடர்பான வழிகாட்டல்

ACJU/NGS/2022/213

2022.07.07 (1443.12.07)

அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு

துல்ஹிஜ்ஜஹ் ஒன்பதாம் நாளில் நோற்கப்படும் அறபா நோன்பு தொடர்பாக ஹதீஸ்களில் பல சிறப்புக்கள் வந்துள்ளன.

‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்; அவர்களிடம் அறபாவுடைய நாளில் நோற்கப்படும் நோன்பு பற்றிக் கேட்கப்பட்ட பொழுது, அது முந்தைய ஓர் ஆண்டிற்கும் பிந்தைய ஓர் ஆண்டிற்கும் அது பாவப்பரிகாரமாக அமையும்’ என்று கூறினார்கள். (ஸஹீஹு முஸ்லிம் -1162)

எமது நாட்டில் இவ்வருடம் துல்ஹிஜ்ஜஹ் மாதத்தின் ஒன்பதாவது தினம் எதிர்வரும் 2022.07.09ஆம் திகதி சனிக்கிழமையாகும். சனிக்கிழமை தினத்தில் மாத்திரம் தனித்து நோன்பு நோற்க முடியுமா என்ற சந்தேகம் சிலரிடம் காணப்படுகின்றது.

அறபாவுடைய நோன்பு காலம், நேரம் குறிப்பிடப்பட்டு ஹதீஸ்களில் வந்துள்ள சுன்னத்தான நோன்புகளில் உள்ளடங்குவதனால் இந்நோன்பை சனிக்கிழமை தினத்தில் தனித்து நோற்றுக்; கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது.

அல்லாஹு தஆலா நம்மனைவருக்கும் அறபாவுடைய நோன்பை நோற்று அதன் சிறப்புக்களை அடைந்து கொள்வதற்கு அருள்புரிவானாக.

‘வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய தினங்களில் ஏதாவது ஒரு தினத்தில் மாத்திரம் நோன்பு நோற்பது தொடர்பான மார்க்க விளக்கம்’ பின்வரும் இணைப்பினூடாக பார்வையிடலாம். https://acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/2247-friday-saturday-fasting#

‘இலங்கையில் அறபாவுடைய நோன்பு நோற்பது பற்றிய விளக்கம்’ பின்வரும் இணைப்பினூடாக பார்வையிடலாம்.

https://acju.lk/news-ta/acju-news-ta/item/1148-2017-08-30-14-13-21?highlight=WyJcdTBiODVcdTBiYjFcdTBiYWFcdTBiYmUiXQ==

 

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
செயலாளர் – ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 
 
 
 

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன