எதிர்வரும் விடுமுறை தினங்கள் தொடர்பாக முஸ்லிம் சமூகத்துக்கான வழிகாட்டல்

ACJU/NGS/2022/092

2022.04.12 (1443.09.10)

பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வரும் இவ்வேளையில் முஸ்லிம்களாகிய நாம் மகத்தான ரமழான் மாதத்தின் நடுப்பகுதியை அடைந்துள்ளோம். அதிகமாக நல்லமல்கள் செய்து இஸ்திஃபார், தவ்பாவின் மூலம் அல்லாஹ்வுடனான நெருக்கத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டிய இச்சந்தர்ப்பத்தில், எதிர்வரும் விடுமுறைத் தினங்களை முன்னிட்டு வீண் பிரயாணங்களை மேற்கொள்வதையோ, களியாட்டங்களில் ஈடுபடுவதையோ தவிர்ந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

அத்துடன், இந்த நெருக்கடியான இச்சூழ்நிலையில் நாட்டுப் பிரஜைகள் அனைவருக்கும் இன, மத பேதமின்றி நன்மையான விடயங்களில் ஒத்துழைப்பு நல்குமாறும், கஸ்டத்துடன் வாழும் சகோதர, சகோதரிகளுக்கு உதவி ஒத்தாசை செய்யுமாறும் சகல முஸ்லிம்களையும் வேண்டிக் கொள்கின்றோம்.

 

அஷ்ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்
பதில் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 
 
 
 

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன