ஜம்இய்யாவின் மாவட்ட, பிரதேசக் கிளைகளின் பதவிதாங்குனர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஊர் ஜமாஅத்தினர்களுக்கு எமது மனப்பூர்வமான நன்றிகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு

விஷேட நன்றி நவிலல்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கடந்த பத்து தசாப்தகால பயணத்தில் அதன் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் தம்மையும் தமது வாழ்வையும் அர்ப்பணம் செய்த எமது முன்னோர்களை நன்றியோடு நினைவுகூரும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட நூற்றாண்டு நிகழ்வு, கடந்த 2023.01.19 ஆம் திகதி அல்லாஹ்வின் பேருதவியால் கொழும்பு சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் கண்ணியமாகவும் சிறப்பாகவும் நடைபெற்று முடிந்தது, அல்ஹம்துலில்லாஹ்.

இந்நிகழ்வு வெற்றிகரமாக நடைபெறுவதற்கு இறுதிவரை எம்மோடு இணைந்து பணியாற்றி, தமது முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கிய ஜம்இய்யாவின் மாவட்ட, பிரதேசக் கிளைகளின் பதவிதாங்குனர்கள், உறுப்பினர்கள், ஊர் ஜமாஅத்தினர்கள், கொழும்பு பள்ளிவாயல் நிர்வாகிகள், விஷேடமாக கொழும்பு மாவட்டக் கிளை மற்றும் கொழும்பு மத்திய கிளை உட்பட தலைமைக் காரியாலயத்தின் பணியாளர்கள் ஆகிய அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அதன் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் சார்பாக தனது மனப்பூர்வமான நன்றிகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

ஜஸாக்குமுல்லாஹு கைரன்

முன்மாதிரி முஸ்லிம் சமூகக் கட்டுருவாக்கல் என்பது தொடர்ச்சியான உழைப்பை வேண்டிநிற்கின்ற சமூகப் பணியாகும். இக்கூட்டுப் பொறுப்பில் நாமும் பங்குதாரர்களாவோம்.

அல்லாஹு தஆலா உங்கள் அனைவரது நற்செயல்களையும் அங்கீகரித்து பூரணமான கூலிகளை வழங்க வேண்டும் என்றும் தொடர்ச்சியாக தீனுடைய பணிகளில் எம்மை அல்லாஹ் ஈடுபடுத்த வேண்டும் என்றும் உளமார பிரார்த்தனை செய்கிறோம்.

தலைவர்
அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

பொதுச் செயலாளர்
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன