நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா மக்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி

Ref: ACJU/NGS/2023/084

2023.02.06 (1444.07.14)

2023.02.06 ஆம் திகதி துருக்கி மற்றும் சிரியாவின் எல்லைப் பகுதிகளில் அடுத்தடுத்து நிகழ்ந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர்ச்சேதங்கள் மற்றும் பேரழிவுகளுக்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஆழ்ந்த கவலையையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் அதேவேளை பாதிக்கப்பட்ட மக்கள் கூடிய விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்றும் அதற்கான தைரியத்தையும் மன வலிமையையும் அல்லாஹு தஆலா அவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறோம்.

அல்லாஹு தஆலா அப்பகுதி வாழ் மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாத்து சந்தோஷத்தையும் முழுமையான சுதந்திரத்தையும் அம்மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் உளமாரப் பிரார்த்தனை செய்கிறோம்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி புரிய முன்வருமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது.

 

அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்

பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 
 
 
 

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன