நாட்டின் தற்போதைய நெருக்கடியான நிலைமையை தீர்க்க மதத் தலைவர்களின் முன்மொழிவுகளை முன்வைக்கும் ஊடக மாநாடு

2022.04.28 ஆம் திகதி இலங்கை தேசிய சர்வமத குழு மற்றும் அமரபுர ராமங்ய நிகாயவின் செயலகத்தின் ஏற்பாட்டில் தற்போதைய நெருக்கடியான நிலைமையை தீர்க்க மதத் தலைவர்களின் முன்மொழிவுகள் எனும் கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக மாநாடு பிடகோட்டை சொலிஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் அஸ்கிரிய மல்வது அமரபுர மற்றும் ராமங்ய நிகாயவை சேர்ந்த பிக்குமார்கள் உட்பட இலங்கை தேசிய கிறிஸ்தவ சபையின் அருட் தந்தையர்கள், குருக்கள்மார்கள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தற்போதைய பதில் தலைவர் அஷ்-ஷைக் அப்துல் காலிக், பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.அர்கம் நூராமித், உப செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம், உப பொருளாளர் கலாநிதி அஸ்வர் அஸாஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
 
 
 
 

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன