மர்ஹூம் அஷ்ஷைக் எம். நிழாம்தீன் (الله يرحمه) அவர்களின் மறைவையொட்டி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி

ACJU/NGS/2023/150

2023.05.29 (1444.11.08)

கண்டி மாவட்டத்தின் இலுக்வத்தை பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மர்ஹூம் அஷ்ஷைக் எம். நிழாம்தீன் (الله يرحمه) அவர்களின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. அன்னார், 2023.05.28 ஆம் திகதி இரவு வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – கண்டி மாவட்டக் கிளையின் முன்னாள் பொருளாளராகவும், யட்டிநுவர பிரதேசக் கிளை உருவாக்கப்பட்டதிலிருந்து தான் நோயினால் பீடிக்கப்படும் வரை செயலாளராகவும் செயற்பட்டவராவார்கள். இலுக்வத்தை ஜுமுஆ மஸ்ஜிதின் செயலாளராகவும் பணியாற்றிய அன்னார் சமூகப் பற்றுள்ளவராகவும், ஜம்இய்யாவுக்காகவும் சமூகத்துக்காகவும் பல பணிகளை மிக ஆர்வத்துடன் செய்யக் கூடியவராகவும் இருந்தார்கள். அத்துடன் யட்டிநுவர மஸ்ஜித் சம்மேளனத்தை உருவாக்க பாரிய பங்களிப்பு செய்துள்ளதோடு அதன் உறுப்பினராகவும் செயற்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வேளையில் அன்னாருடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழு மற்றும் அனைத்து உலமாக்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, அவர்களை பரிசுத்தப்படுத்தி, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.

أللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده واغفر لنا وله

(யா அல்லாஹ்! அவருக்காக செய்யப்பட்ட நன்மைகளின் கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே. அவருக்குப் பின்னர் எங்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடாதே. எம்மையும், அவரையும் மன்னித்தருள்வாயாக.)

 

முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன