மஸ்ஜித்களில் தப்ஸீர் வகுப்புகள் நடாத்துவது தொடர்பாக (கண்ணியமிக்க உலமாக்களுக்கு)

ACJU/NGS/2023/124

2023.04.12 (1444.09.20)

கண்ணியமிக்க உலமாக்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு

எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா நம்மனைவரையும் பொருந்திக் கொள்வானாக.

புனித அல்குர்ஆன் முழு பிரபஞ்சத்தையும் படைத்து பரிபாலித்து போசித்து வளர்த்து பாதுகாக்கும் ஏக வல்லோன் அல்லாஹுத் தஆலாவின் மனித சமூகத்திற்கான தூதாகும். அதனை விளங்கி அதன் பிரகாரம் அமல் செய்கின்ற அளவுக்கு மனிதன் ஈருலக நற்பாக்கியங்களை அடைந்து கொள்கிறான்.

இலங்கை வாழ் ஒவ்வொரு மனிதனும் அல்குர்ஆனின் தூதை விளங்க வேண்டும் என்ற உயர்நோக்கில் இந்நாட்டில் சிங்கள மொழியில் பேசக்கூடிய எல்லோருக்கும் அதிலும் குறிப்பாக பெரும்பான்மை சமூகத்துக்கும் சிங்கள மொழி மூலம் ஆங்காங்கே தேவையான விளக்கங்களுடனும் முக்கிய குறிப்புகளுடன் கூடிய மொழிப்பெயர்ப்பை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வெளியிட்டது. இது இந் நாட்டில் மிகத் தேவையான காலக் கட்டத்தில் வெளியிடப்பட்டு மாற்று மத சகோதரர்களின் பல்வேறு சந்தேகங்களைக் களையவும் அவர்களுக்கு தெளிவுகளை வழங்கவும் உறுதுணையாக அமைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

அதனைத் தொடர்ந்து இலங்கை வாழ் முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் பேசும் தமிழ் மொழி மூலமும் அல்குர்ஆனுக்கான மொழிபெயர்ப்பை வெளியிடும் முயற்சியில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஈடுபட்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக அம்ம ஜுஸ்உ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த மொழியாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மஸ்ஜித்களில் தப்ஸீர் வகுப்புக்களை நடாத்துவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மஸ்ஜித் நிர்வாகிகளுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது.

எனவே, இது விடயத்தில் கவனம் செலுத்தி தப்ஸீர் ஜலாலைன், ஸப்வத்துத் தபாஸீர், தப்ஸீர் இப்னு கஸீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மேலதிக விளக்கங்களுக்கு அடிப்படையாகக் கொண்டு, மஸ்ஜித் நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன், மஸ்ஜித்களில் நடைபெற்று வருகின்ற நிகழ்ச்சிகளுக்கு எவ்வித இடையூறும் இல்லாத வண்ணம் பொதுமக்களுக்கான தப்ஸீர் வகுப்புக்களை நடாத்துமாறும், இவ்விடயத்தில் தங்களது பூர்த்தியான பங்களிப்புக்களை வழங்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிக அன்பாக வேண்டிக் கொள்கின்றது.

 

அஷ்-ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி

தலைவர்,

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்
பதில் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன