கிண்ணியா பிரதேசக் கிளைக்கான நிர்வாகக் குழுத் தெரிவினை முன்னிட்டு நடைபெற்ற தெளிவூட்டல் நிகழ்வு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிண்ணியா பிரதேசக் கிளைக்கான நிர்வாகக் குழுத் தெரிவினை முன்னிட்டு அது பற்றிய தெளிவுபடுத்தல் நிகழ்வு 2026 ஜூலை 09 அன்று ஜம்இய்யாவின் கிளைகள் விவகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில் கிண்ணியா கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

இதன்போது, பிராந்தியக் கிளைகளுக்கான தெரிவு பற்றிய ஜம்இய்யாவின் நடைமுறைகள் மற்றும் யாப்பு விதிகள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டதுடன், தெரிவு முறை குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், கிண்ணியா கிளை ஜம்இய்யாவின் 30க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதில், வளவாளர்களாக அஷ்-ஷைக் அப்துல் காதர், அஷ்-ஷைக் உமர் பாரிஸ் ஆகியோர் கலந்துகொண்டு தெளிவுகளை வழங்கினர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன