மன்னார் எருக்கலம்பிட்டி 04 ஆம் வட்டாரத்தை சேர்ந்த அஷ்-ஷைக் ஜமீல் முஹம்மத் அத்ஹர் (அஷ்ரபி) (اللهم اغفر له وارحمه) அவர்களின் மறைவையிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை விடுக்கும் அனுதாபச் செய்தி

ACJU/NGS/2025/176
2025.09.29 (1447.04.06)

மன்னார் எருக்கலம்பிட்டி 04 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அஷ்-ஷைக் ஜமீல் முஹம்மத் அத்ஹர் (அஷ்ரபி) (اللهم اغفر له وارحمه) அவர்களின் மரணச் செய்தி எம்மை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.

அவர்கள் 2025.09.29 திங்கட்கிழமை வஃபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

இவர் புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள தாருல் உலூம் அல் அஷ்ரபிய்யாவில் கற்று, 2011ஆம் ஆண்டு அல்-ஆலிம் பட்டம் பெற்றார். வட மாகாணத்தில் அஹதிய்யா பாடசாலைகள் உருவாக்கத்திற்கு வித்திட்டு, எருக்கலம்பிட்டி அல்-இஹ்ஸான் அஹதிய்யா பாடசாலையின் அதிபராகவும் பணியாற்றினார்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை – மன்னார் நகரக் கிளையின் செயலாளராக இருந்து பல்வேறு சமய, சமூகப் பணிகளைச் செய்து வந்ததுடன் மன்னார் மாவட்டக் கிளையின் வளர்ச்சிக்கும் தன்னாலான பங்களிப்புகளைச் செய்து வந்தார்.

மன்னார் – எருக்கலம்பிட்டி காட்டுபாவா ஜுமுஆ பள்ளிவாசலில் மிக நீண்ட காலமாக இமாமாகவும் உம்முல் ஹைராத் அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் மறுமலர்ச்சி பாடசாலை அதிபராகவும் கடமையாற்றி அனைவரிடமும் நன்மதிப்பைப் பெற்றவர்.

இவ்வேளையில் அன்னாருடைய மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு மற்றும் அனைத்து ஆலிம்கள் சார்பிலும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அல்லாஹு தஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, அவர்களுடைய குற்றங் குறைகளை மன்னித்து பரிசுத்தப்படுத்தி, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக!

أللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده واغفر لنا وله

(யா அல்லாஹ்! அவருக்காக செய்யப்பட்ட நன்மைகளின் கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே! அவருக்குப் பின்னர் எங்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடாதே! எம்மையும் அவரையும் மன்னித்தருள்வாயாக!)

 

முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன