அஷ்-ஷைக் முஹம்மது ஹுஸைன் ஆலிம் முஹம்மது லாபிர் (கபூரி) அவர்களது (اللهم اغفر له وارحمه) மறைவையிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை விடுக்கும் அனுதாபச் செய்தி

2025.05.12
1446.11.13

மல்வானையை சேர்ந்த அஷ்-ஷைக் எம்.எச்.எம். லாபிர் அவர்கள் (اللهم اغفر له وارحمه) அவர்களின் மரணச் செய்தி எம்மை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் திங்கட்கிழமை 2025.05.12ஆம் திகதி வபாத்தானார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் தனது ஆரம்பக் கல்வியை மல்வானை அல்-முபாரக் தேசிய பாடசாலையில் கற்றதுடன் மஹரகம கபூரிய்யா அரபுக் கல்லூரியில் மௌலவி பட்டம் பெற்று தன் சுய முயற்சியால் பேராதனை பல்கலைக் கழகத்தில் கலைமானி பட்டமும் பெற்றார்.

தான் கற்ற அல்-முபாரக் தேசிய பாடசாலையில் இஸ்லாம் பாட ஆசிரியராக கடமையாற்றிய அஷ்-ஷைக் எம்.எச்.எம். லாபிர் அவர்கள் கபூரிய்யா அரபுக் கல்லூரியிலும் அதிபராக பணியாற்றினார்.

அன்னார் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஃபத்வாக் குழுவின் முன்னாள் செயலாளராக இருந்ததுடன் கம்பஹா மாவட்டக் கிளையின் முன்னாள் தலைவராகவும், செயலாளராகவும் சேவையாற்றியுள்ளார். மேலும் ஜம்இய்யாவின் மல்வானை கிளையின் ஸ்தாபகர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுமாத்திரமன்றி கம்பஹா மாவட்ட அஹதிய்யா சம்மேளனத்தின் ஸ்தாபகராகவும், தலைவராகவும் பொறுப்பு வகித்த அன்னவர்கள் மல்வானை அஹதிய்யா நிறுவனத் தலைவராக செயற்பட்டதோடு தேசிய அஹதிய்யா சம்மேளனத்தின் சிரேஷ்ட உறுப்பினராகவும் பியகம பிரதேச காதி நீதிபதியாகவும் பதவி வகித்தார்கள்.

இவ்வேளையில் அன்னாருடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள், மாணவர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு மற்றும் அனைத்து ஆலிம்கள் சார்பிலும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அல்லாஹு தஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, அவர்களுடைய குற்றங் குறைகளை மன்னித்து பரிசுத்தப்படுத்தி, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக!

أللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده واغفر لنا وله

“(யா அல்லாஹ்! அவருக்காக செய்யப்பட்ட நன்மைகளின் கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே! அவருக்குப் பின்னர் எங்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடாதே! எம்மையும், அவரையும் மன்னித்தருள்வாயாக!)”

 

முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன