2025 ஜூலை 26ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் மத்திய குழுக் கூட்டம், தலைவர் முஃப்தி எம். ஐ. எம். ரிஸ்வி அவர்களின் தலைமையில், பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ், ஜம்இய்யாவின் தலைமையகத்தில் இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில், ஜம்இய்யாவின் யாப்புத் திருத்தம் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், மத்திய குழு உறுப்பினர்களால் திருத்தத்திற்கான பல்வேறு முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டன.
இக்கூட்டம் இரண்டு அமர்வுகளாக நடைபெற்றதுடன், இரண்டாவது அமர்வை ஜம்இய்யாவின் உப செயலாளர் அஷ்-ஷைக் எம். எஸ். எம். தாஸிம் அவர்கள் நெறிப்படுத்தினார்.
ஜம்இய்யாவின் மத்திய குழு உறுப்பினர்களில் 55 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

– ACJU Media –




