ஹெம்மாதகமையைச் சேர்ந்த அஷ்ஷைக் முஹம்மத் லெப்பை ஆலிம் (கபூரி) (اللهم اغفرله وارحمه) அவர்களின் மறைவையிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை விடுக்கும் அனுதாபச் செய்தி

ACJU/MED/2020/009

24.07.2020 (1441.12.02)

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி

ஹெம்மாதகமையைச் சேர்ந்த அஷ்ஷைக் முஹம்மத் லெப்பை ஆலிம் (கபூரி) அவர்களின் மரணச் செய்தி எம்மைக் கவலையில் ஆழ்த்துகின்றது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பணிகளில் பங்காற்றிய அஷ்ஷைக் முஹம்மத் லெப்பை ஆலிம் (கபூரி) அவர்கள் நேற்று (23.07.2020) வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஹெம்மாதகமைக் கிளையின் உறுப்பினராக நீண்ட நாட்களாக பணிபுரிந்து ஜம்இய்யாவின் வளர்ச்சிக்கு பணியாற்றியவராவார். அன்னாரின் குடும்பத்தினருக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது.

எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, சகல பிழைகளையும் பொறுத்து, நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக. அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதலையும் நற்கூலியையும் வழங்குவானாக. ஆமீன்.

வஸ்ஸலாம்.

 

அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித்

உதவிப் பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன