அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ஹனீபா (பஹ்ஜி) (اللهم اغفرله وارحمه) அவர்களின் மறைவையிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை விடுக்கும் அனுதாபச் செய்தி

ACJU/MED/2020/006
04.06.2020  12.10.1441

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி

அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ஹனீபா (பஹ்ஜி) அவர்களின் மரணச் செய்தி எம்மைக் கவலையில் ஆழ்த்துகின்றது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முன்னால் தலைவர்களில் ஒருவரான அஷ்ஷைக் இப்ராஹிம் இப்னு ஒமருலெப்பை அவர்களின் புதல்வரும், நாடறிந்த உலமாக்களில் ஒருவருமான அஷ்-ஷைக் எம்.ஐ.எம் ஹனீபா (பஹ்ஜி)  அவர்கள் இன்று (04.06.2020) வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

கண்டி தஸ்கர ஹக்கானிய்யா அரபுக் கலாபீடத்தின் ஆயுட்கால தலைவராகவும், சிரேஷ்ட விரிவுரையாளராகவும் கடமையாற்றி வந்த இவர்கள் தனது வாழ்நாளை கல்வி மற்றும் தீன் பணிக்காகச் செலவழித்தார்கள். இவர்கள் பல்லாயிரம் மாணவர்களின் ஆசிரியராக திகழ்ந்ததுடன் நடுநிலையானப் போக்கோடு இருந்து வந்தார்கள்.

அரசாங்கப் பாடசாலை ஆசிரியரான இவர்கள் இலங்கையின் பல பாடசாலைகளில் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்கள். தஸ்கர ஹக்கானிய்யா அரபுக் கல்லூரியுடன் பிணைந்து செயற்பட்ட இவர்கள் இறுதி வரை கல்விப் பணிக்காகவே தன்னை அர்ப்பணித்து செயற்பட்டார்கள். இதன் விளைவாக பல கல்விமான்களை இப்பூமியில் உருவாக்கியப் பெருமை இவரைச் சாரும்.

எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, சகல பிழைகளையும் பொறுத்து, நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக. அவர்களது குடும்பத்தினர், மாணவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும் நற்கூலியையும் வழங்குவானாக, ஆமீன்.

வஸ்ஸலாம்.

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன