ACJU/NGS/2025/155
2025.08.22 (1447.02.27)
இறக்காமத்தைச் சேர்ந்த அஷ்-ஷைக் மீரா சாஹிபு சின்ன அஹ்மத் லெப்பை ஷர்க்கி (اللهم اغفر له وارحمه) (அதிபர்) அவர்களின் மரணச் செய்தி எம்மை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.
அவர்கள் 2025.08.22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இறக்காமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் சேர்ந்து ஷர்க்கி பட்டம் பெற்று மௌலவியாக வெளியேறினார்.
1973 இல் அரபு உதவி ஆசிரியர் நியமனத்தைப் பெற்று, அனுராதபுரம் – பண்டாரப் பொத்தானை முஸ்லிம் வித்தியாலயம், பளளுவெவை முஸ்லிம் வித்தியாலயம் ஆகியவற்றிலும் மாணிக்கமடு வித்தியாலயத்திலும் ஓர் ஆசிரியராகக் கடமையாற்றினார்.
1991 இல் குடுவில் அல் ஹிரா வித்தியாலயத்தில் கடமையாற்றிய காலப் பகுதியில் அதிபர் தரம் III இற்கும் 1996 இல் தரம் ஐஐ இற்கும் உயர்வு பெற்று சுமார் 33 வருடங்கள் ஆசிரியராக, அதிபராக சேவையாற்றி 2007.01.01 அன்று ஓய்வு பெற்றார்.
அன்னார் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இறக்காமம் பிரதேசகக் கிளையின் முன்னாள் தலைவராகவும் சேவையாற்றியுள்ளார்.
இவ்வேளையில் அன்னாருடைய பிள்ளைகள், குடும்பத்தினர்கள், உறவினர்கள், மாணவர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு மற்றும் அனைத்து ஆலிம்கள் சார்பிலும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அல்லாஹு தஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, அவர்களுடைய குற்றங் குறைகளை மன்னித்து பரிசுத்தப்படுத்தி, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக!
أللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده واغفر لنا وله
‘(யா அல்லாஹ்! அவருக்காக செய்யப்பட்ட நன்மைகளின் கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே! அவருக்குப் பின்னர் எங்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடாதே! எம்மையும் அவரையும் மன்னித்தருள்வாயாக!)’
முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா




