கொரோனா வைரஸ் (COVID 19) பரவுவதைத் தடுக்க குனூத் அந்-நாஸிலாவை ஐவேளைத் தொழுகைகளிலும் ஒரு மாத காலத்திற்கு சுருக்கமாக ஓதி வருவோம்

ACJU/FRL/2020/07-223

13.03.2020 – 17.07.1441

கொரோனா வைரஸ் (COVID 19பரவுவதைத் தடுக்க குனூத் அந்-நாஸிலாவை ஐவேளைத் தொழுகைகளிலும் ஒரு மாத காலத்திற்கு சுருக்கமாக ஓதி வருவோம்

தற்பொழுது பல நாடுகளில் கொரோனா வைரஸ் (COVID 19பரவி  அதன் மூலம் மக்கள் மிகவும் சிரமப்பட்டு இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டு இருப்பதையும், குறிப்பாக எமது நாட்டிலும் குறித்த வைரஸ் பரவலாம் என்ற அச்சம் இருப்பதையும் நாம் அறிவோம்.

அல்லாஹு தஆலா அடியார்களுக்கு சோதனைகளை ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள் தன் பக்கம் திரும்ப வேண்டும் என்பதையே விரும்புகின்கிறான். இச்சோதனைகள் நீங்குவதற்காக துஆ, திக்ர், தொழுகை, நோன்பு மற்றும் ஸதகா போன்ற நல்லமல்கள் மூலம் அல்லாஹ்வின் பக்கம் நாம் திரும்ப வேண்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சோதனைகள் ஏற்படும் போது குனூத் அந்-நாஸிலா ஓதியுள்ள விடயம் பல ஸஹீஹான ஹதீஸ்களில் பதிவாகியுள்ளது. இதை அடிப்படையாக வைத்து பாரிய நோய்கள் பரவும் போது குனூத் அந்-நாஸிலா ஓதுவது சுன்னதாகும் என்று மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே, இலங்கையில் கொரோனா வைரஸ் (COVID 19பரவலாம் என்று அஞ்சப்படுவதால் அடுத்து ஒரு மாத காலத்திற்கு ஐவேளைத் தொழுகைகளிலும் குனூத் அந்-நாஸிலாவை ஓதுவதற்கு மஸ்ஜித்களில் ஏற்பாடு செய்யுமாறும், மஸ்ஜிதுடைய இமாம்கள் குனூத் அந்-நாஸிலாவை ஓதும் போது வழமையாக பஜ்ருடைய தொழுகைகளில் ஓதப்படும் குனூத்துடைய துஆவுடன் பின்வரும் துஆக்களை மாத்திரம் ஓதுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.

 

اللَّهُمَّ إِنِّا نَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ، وَالْجُنُونِ، وَالْجُذَامِ، وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ               سنن أبي داود

اللهمَّ إِنِّا نَعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلَاءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الْأَعْدَاءِ   صحيح البخاري

 إِنِّا نَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ         صحيح مسلم

 

 

அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்

செயலாளர், பத்வாக் குழு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 
 
 
 

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன