முஸ்லிம் சகோதரர்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் வேண்டுகோள்

15-03-2020

முஸ்லிம் சகோதரர்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் வேண்டுகோள்

கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் உலகசுகாதார ஸ்தாபனமும்,  இலங்கை சுகாதார அமைச்சும் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மக்கள் ஒன்று கூடும் சந்தாப்;பங்கள் தவிர்க்கப்படல் வேண்டும் என்ற வகையில் மஸ்ஜித்களில் ஜுமுஆ, ஐவேளை ஜமாஅத்தொழுகைகள் உட்பட ஏனைய எல்லா வகையான ஒன்று கூடல்களையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரும் வரை இடை நிறுத்துமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நாட்டு முஸ்;லிம்களை அன்பாக வேண்டிக் கொள்கின்றது.

இத்தகைய சந்தர்ப்பங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அறிவுறுத்தல்களை கடைபிடிக்குமாறும், அதனை அமுல்படுத்துவதில் பள்ளிவாசல்களின் சம்மேளனங்கள் கண்டிப்போடு நடந்து கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கிறது.

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாரக்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 
 
 
 

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன