டித்வா” ( DITHWA) புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  அரசாங்கம் வழங்கும் உதவிகளை பெறுவது பாதிக்கப்பட்டவர்களின் உரிமையாகும். அதனைப்பெற எமது வழிகாட்டல்களை பின்பற்றுங்கள்

2025.12.04.

1447.06.12

டித்வா புயலினால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலையிலிருந்து மக்களை மீட்டெடுக்க அகில இலங்கை ஜம்யதுல் உலமா அதன் பிரதேசக்கிளைகள், மஸ்ஜித் சம்மேளனங்கள், சமூக சேவை அமைப்புக்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது . 
 
இதன் தொடராக அரசாங்கத்தால் வழங்கப்படும் நிவாரண நிதியை பெறுவது தொடர்பான வழிகாட்டல்களையும் தருகிறது.
 
விண்ணப்பிக்கும் முறையின் முழு படிநிலைகளும் கீழே தரப்பட்டுள்ளன:
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள், வீட்டுப் பொருட்கள் மற்றும் வாழ்வாதாரம்  இழந்த குடும்பங்கள், விவசாயிகள், வியாபாரிகள், காயமடைந்தவர்கள் மற்றும் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினர் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.
 
கீழ்க் காணும் ஆவணங்கள் தேவைப்படும் 
  • தேசிய அடையாள அட்டை 
  • ஏற்பட்ட சேதத்தின் புகைப்படங்கள், முடிந்தால் வீடியோ பதிவுகள் .
  • வங்கி கணக்கு விவரங்கள் (விவசாயிகள் விவசாய திணைக்களத்திலிருந்து சான்றிதழ் பெற வேண்டி வரலாம்), வியாபாரிகள் வியாபார பதிவு (Business Registration) அல்லது வர்த்தக உரிமம் (Trade License) 
மேலும் தேவையான படிவங்களை தயார் படுத்தி கிராம உத்தியோகத்தர் (GN) ஊடாக பிரதேச செயலகங்களில் உள்ள அனர்த்த நிவாரண பிரிவுக்கு (Disaster Relief Section) சமர்ப்பிக்க வேண்டும். 
 
குறிப்பு : பாதிக்கபட்ட இடங்களை பொறுத்து அதிகாரிகள் அவ்விடங்களுக்கு சென்று நேரடியாக பதிவு செய்கிறார்கள். சில மாவட்டங்களில் மாவட்ட செயலகத்தில் விசேட கவுண்டர்கள் அமைக்கபபடும் வாய்ப்பும் உள்ளது. 
 

அதிகாரிகளின் ஆலோசனைக்கு ஏற்ப செயல்படுமாறும் விண்ணப்ப படிவத்தை நன்றாக வாசித்து கேட்கப்பட்ட தகவல்களை சரியாக குறிப்பிடுமாறும், விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின் அதிகாரிகள் பாதிப்பினை பார்வையிட்டு ஆய்வு செய்யலாம். அதற்கு  தயார் நிலையில் இருக்குமாறும் அகில இலங்கை ஜம்யதுல் உலமா கேட்டுக்  கொள்கிறது

ACJU MEDIA

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன