தித்வாப் புயலால் ஏற்பட்ட கடும் மழை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் மரணித்து அடக்கம் செய்யப்பட்டோருக்காக மறைவான ஜனாஸா தொழுகை நிறைவேற்ற விரும்பவோர், அதனை தொழுது கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

ACJU/FRL/2025/48/467
2025.12.03 -1447.06.11

அன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹ்

தித்வாப் புயலால் ஏற்பட்ட கடும் மழை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் மரணித்து அடக்கம் செய்யப்பட்டோருக்காக மறைவான ஜனாஸா தொழுகை நிறைவேற்ற விரும்பவோர், அதனை தொழுது கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அதேநேரம், ஜனாஸா அடக்கம் செய்யப்பட்ட ஊரில் வசிப்பவர்கள், அங்கு ஜனாஸா அடக்கம் செய்யப்பட்ட இடங்களுக்குச் சென்று ஜனாஸா தொழுகையை நிறைவேற்ற வேண்டும். ஏனெனில், ஊரில் மறைவான ஜனாஸா தொழுகை நிறைவேற்ற அனுமதி கிடையாது.

இருப்பினும் , ஜனாஸா அடக்கம் செய்யப்பட்ட இடங்களுக்கு செல்வதில் சிரமம் ஏதும் இருந்தால் மஸ்ஜித் போன்ற பொருத்தமான இடங்களில் தொழுது கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

முஃப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் எம்.டி.எம் ஸல்மான்
பதில் செயலாளர், பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன