தர்கா நகர் பிரதேசத்தில் நடைபெற்ற மஸ்ஜிதுகள் சார்ந்து போதை ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அணிகளுக்கான வழிகாட்டல் செயலமர்வு

2025 நவம்பர் 23ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் நெறிப்படுத்தலில் தர்கா நகர் கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் மஸ்ஜிதுகள் சார்ந்து போதை ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அணிகளுக்கான வழிகாட்டல் செயலமர்வு வெலிபிட்டிய ஜுமுஆ மஸ்ஜிதில் இடம்பெற்றது.

இச்செயலமர்வில், போதையொழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 80க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து பயன்பெற்றனர்.

இதில், மஸ்ஜிதுகளின் மூலமாக எவ்வாறு போதையொழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் இளைஞர்களை மஸ்ஜிதுகளோடு தொடர்புபடுத்துவதற்கான வழிவகைகள் குறித்தும் பேசப்பட்டன.

குறித்த செயலமர்வில் ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி க்ராத்தி அவர்கள் வளவாளராக கலந்துகொண்டார்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன