அனர்த்த உதவித் திட்டம் தொடர்பிலான இரண்டாம் கட்ட ஒன்றுகூடல்

2025 நவம்பர் 30ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இடையில் அனர்த்த உதவித் திட்டம் வழங்குவது தொடர்பிலான இரண்டாம் கட்ட ஒன்றுகூடல் ஜம்இய்யாவின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதில், பின்வரும் விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு உடனடி தீர்மானங்களும் எட்டப்பட்டன.

1) நிவாரணம் தாமதமாக கிடைக்கப் பெற்ற மக்களின் அத்தியாவசிய தேவைகளை இனங்கண்டு அவற்றை துரிதமாக பெற்றுக் கொடுத்தல்.

2) அனர்த்த நிலைமைகளினால் கடுமையான பாதிப்புகளுக்குள்ளான கம்பளை, ரம்புக்கல, மூதூர் போன்ற பகுதிகளில் அரசாங்க தரப்புடன் இணைந்து நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தல்.

3) இன்றிரவும் நாளையும் பெரும் வெள்ளம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு குறித்த தகவலை தெரியப்படுத்துவதுடன் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குதல்.

இச்சந்திப்பில் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

– ACJU Media –

Related Posts

தித்வாப் புயலால் ஏற்பட்ட கடும் மழை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் மரணித்து அடக்கம் செய்யப்பட்டோருக்காக மறைவான ஜனாஸா தொழுகை நிறைவேற்ற விரும்பவோர், அதனை தொழுது கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன