2025 டிசம்பர் 07ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் மாவட்டக் கிளைகளின் பதவிதாங்குநர்களுடனான அவசர ஒன்றுகூடலொன்று ZOOM வாயிலாக நடைபெற்றது.
டிட்வா புயலினால் நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பதிவான அனர்த்த நிலைமைகளை கேட்டறிந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை ஜம்இய்யாவின் அனர்த்த நிவாரண ஒருங்கிணைப்பு மையத்தின் (RCC) ஊடாக பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இவ்வொன்றுகூடல் நடைபெற்றது.
இதில், ஜம்இய்யாவின் 24 மாவட்டக் கிளைகளின் பதவிதாங்குநர்களும் கலந்து கொண்டு தத்தமது மாவட்டங்களில் பதிவான பாதிப்பு விபரங்களை முன்வைத்ததுடன் இதுவரை எவ்வாறான உதவிகள் கிடைத்துள்ளன? எவ்வாறான உதவிகள் தேவைப்பாடாக உள்ளன? என்பது குறித்தும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
இவ்வொன்றுகூடலில், ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், அனர்த்த நிவாரண ஒருங்கிணைப்பு மையத்தின் (RCC) உறுப்பினர்கள் மற்றும் மாவட்டக் கிளைகளின் பதவிதாங்குநர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

– ACJU Media –


