07.09.2025
அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
சூரிய மற்றும் சந்திர கிரகணத் தொழுகைகளைத் தொழுவது சுன்னத் ஆக்கப்பட்டதாகும். இதனை கூட்டாகத் தொழுவது சுன்னத்தாகும். முடியாத போது தனியாகவும் தொழுவதற்கு முடியும். இதனை மஸ்ஜிதுக்கு வந்து நிறைவேற்ற முடியாதவர்கள் வீட்டிலும் தனியாக நிறைவேற்றிக் கொள்ள முடியும். இதனது நேரம் கிரகணத்தை பார்த்ததிலிருந்து அது நீங்கும் வரை உள்ள நேரமாகும். கிரகணம் முழுமையாக நீங்கியதற்கு பிறகு இந்த தொழுகை சுன்னத் ஆக்கப்பட மாட்டாது.
சந்திர கிரகண தொழுகை என்பது ஜமாஅத்துடன் (சத்தமாக) நிறைவேற்றப்படும் இரண்டு ரக்அத் தொழுகை ஆகும்.
ஒவ்வொரு ரக்அத்திலும்:
• இரண்டு கியாம்கள் (நிலைகள்)
• இரண்டு முறைகள் சூரத் அல்-ஃபாத்திஹா மற்றும் வேறு ஸூரா ஓதுதல்,
• இரண்டு ருகூஉகள்,
• இரண்டு ஸுஜூத்கள் இருக்கும்.
⸻
தொழுகையின் விபரம் பின்வருமாறு
முதல் ரக்அத்
சந்திர கிரகண தொழுகையை தொழுகிறேன் என நிய்யத் வைத்து தொழவேண்டும்.
1. சூரத் அல்-ஃபாத்திஹா ஓதுதல்
2. ஒரு நீண்ட ஸூரா ஓதுதல்
3. நீண்ட ருகூ செய்தல்
4. ருகூவிலிருந்து எழுந்து நிலைக்கு வருதல் ( سمع الله لمن حمده என்று கூறி நிலைக்கு வந்து தக்பீர் கட்டிக் கொள்ளல்)
(இப்பொழுது சஜ்தாவுக்கு செல்லாமல் மீண்டும் கியாமில் நிற்றல்)
5. மீண்டும் சூரத் அல்-ஃபாத்திஹா ஓதுதல்
6. மீண்டும் ஒரு நீண்ட ஸூரா ஓதுதல் (முதல் ஓதியதைவிடச் சற்றுக் குறைவாக)
7. மீண்டும் நீண்ட ருகூ செய்தல் (முதலிலிருந்ததைவிடச் சற்றுக் குறைவாக)
8. ருகூவிலிருந்து எழுந்து நிற்றல்
9. பின்னர் இரண்டு ஸுஜூத்கள் செய்தல்
⸻
இரண்டாம் ரக்அத்
• முதல் ரக்அத்தைப் போலவே செய்வார்.
• ஆனால் ஓதுதலிலும், ருகூவிலும் முதலிலிருந்ததைவிடச் சற்றுக் குறைவாக இருக்கும்.
⸻
இரண்டு குத்பாக்கள்
தொழுகை முடிந்ததும், இமாம் இரண்டு குத்பாக்களை நிகழ்த்துவது சுன்னத்தாகும்.
• இவை ஜும்ஆக் குத்பாவின் அர்கான்களும் நிபந்தனைகளும் போலவே இருத்தல்.
• இதில் மக்கள் தவ்பா செய்யவும், நல்லவற்றில் ஈடுபடவும் ஊக்குவுத்தல்.
• மேலும், கவனக்குறைவு மற்றும் உலகத்தில் மயங்குவதில் விழுந்துவிடாமல் எச்சரித்தல்.
ஃபத்வா பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா




1 thought on “சந்திர கிரகண தொழுகை தொழுவது தொடர்பான விளக்கம்”
So grateful for the organization sharing this post….allahumma baarik lakum