சந்திர கிரகணம் தொடர்பான வழிகாட்டல்

2025.09.03 – 1447.03.10

இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (2025.09.07) அன்று பூரண சந்திர கிரகணம் (Total Lunar Eclipse – Blood Moon) ஏட்படவுள்ளதாகவும் இதனை கொழும்பு (நேர வலயம் 5.5) நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 09:57 மணி முதல் மறுநாள் (2025.09.08) அதிகாலை 01:26 மணி வரை இலங்கையில் ஏற்படலாம் எனவும் வானியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

 وَمَا نُرْسِلُ بِالْآيَاتِ إِلا تَخْوِيفًا (الاسراء: 59)

(மக்களை) அச்சமூட்டி எச்சரிப்பதற்காவே அன்றி நாம் (இத்தகைய) அத்தாட்சிகளை அனுப்புவதில்லை.
(அல்குர்ஆன் – 17:59)

சூரியன் மற்றும் சந்திரன் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். ஒருவருடைய மரணத்திற்காகவோ அல்லது ஒருவரின் பிறப்பிற்காகவோ அவை மறைவதில்லை. அவற்றை (மறையக்) கண்டால் அல்லாஹ்விடம் இரைஞ்சுங்கள், தக்பீர் சொல்லுங்கள், தொழுகையில் ஈடுபடுங்கள், தருமம் செய்யுங்கள் என்று நபி அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி -1044)

கிரகணங்கள் ஏற்படும்போது வீண் பராக்குகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மேற்குறித்த வழிகாட்டலை கடைப்பிடித்தொழுகுமாறும் அன்றைய தினம் கிரகணம் ஏற்படும்போது கிரகணத் தொழுகையை அனைத்து மஸ்ஜிதுகளிலும் நிறைவேற்றுமாறும் நாட்டு முஸ்லிம்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு கேட்டுக்கொள்கிறது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – பிறைக் குழு

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன