அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் புதிய நிறைவேற்றுக் குழுவின் அடுத்த மூன்றாண்டுகளுக்கான திட்டமிடல் கூட்டம்

2025 நவம்பர் 01 மற்றும் 02ஆம் திகதிகளில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் புதிய நிறைவேற்றுக் குழுவின் அடுத்த மூன்றாண்டுகளுக்கான திட்டமிடல் மற்றும் அறிமுகக் கூட்டம் சனிக்கிழமை காலை 5 மணியளவில் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களது தலைமையில் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களது நெறிப்படுத்தலில் கொழும்பு, மென்டரினா ஹோட்டலில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஜம்இய்யாவின் உப குழுக்களின் பொறுப்புக்கள், பணிகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

2025 ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற ஜம்இய்யாவின் பொதுக்கூட்டத்தின் போது ஒவ்வொரு உப குழுவும் உப தலைவர்களுக்கு கீழால் நிறைவேற்றுக் குழுவின் அனுமதியுடன் சுயமாக இயங்கும் என்ற யாப்பு விதிகளின் திருத்தத்திற்கமைய  உப தலைவர்களின் கீழ் வரக்கூடிய உப குழுக்களின் செயலாளர்களினால் 03 மாதங்களுக்கான செயற்றிட்டங்கள் சபையில் முன்வைக்கப்பட்டன.

மேலும் அவற்றை எவ்வாறு ஜம்இய்யாவின் கிளைகள் மற்றும் மஸ்ஜிதுகள் ஊடாக நாடளாவிய ரீதியில் செயற்படுத்துவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பின்வரும் ஒழுங்கில் தலைவர் மற்றும் உப தலைவர்களின் கீழ் இயங்கும் ஜம்இய்யாவின் உப குழுக்களும் அவற்றின் செயலாளர்களும் நியமிக்கப்பட்டனர்.

முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி:
▪️ ஃபத்வா குழு – அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
▪️ மகளிர் விவகாரக் குழு – அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம். ஜவ்பர்
▪️ ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழு – அஷ்-ஷைக் ஏ.எச். இஹ்ஸானுதீன்

அஷ்-ஷைக் எச். உமர்தீன்:
▪️ ஆலிம்கள் விவகாரக் குழு – அஷ்-ஷைக் என்.எம். ஸைபுல்லாஹ்
▪️ பிரச்சாரக் குழு – அஷ்-ஷைக் ஏ.ஆர். அப்துர் ரஹ்மான்
▪️ ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு – அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன்

அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ரிலா:
▪️ அல்-குர்ஆன் மத்ரஸா குழு – அஷ்-ஷைக் ஏ.சீ.எம். பாஸில்
▪️ கல்விக் குழு – அஷ்-ஷைக் எம்.எஸ்.எம் நாழிம்

அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான்:
▪️ பிறைக் குழு – அஷ்-ஷைக் ஏ.எம்.எம். மபாஹிம்
▪️ ஊடகக் குழு – அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம்
▪️ கிளைகள் விவகாரக் குழு – அஷ்-ஷைக் என்.ரீ.எம். ளரீஃப்

அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக்:
▪️ அரபுக் கல்லூரிகளுக்கான குழு – அஷ்-ஷைக் கலாநிதி ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர்
▪️ இளைஞர் விவகாரக் குழு – அஷ்-ஷைக் கே.எம். முக்ஸித் அஹ்மத்

அஷ்-ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் சூரி:
▪️ சமூக சேவைக் குழு – அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர்

இக்கூட்டத்தில், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழுவிற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது ஜம்இய்யாவின் கடந்த நிறைவேற்றுக் குழுவில் அங்கம் வகித்த முன்னாள் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் நினைவுகூரப்பட்டனர்.

இறுதியாக ஜம்இய்யாவின் பொருளாளர் அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான் அவர்களின் நன்றியுரையுடன் ஞாயிறு மாலை 4.30 மணியளவில் இக்கூட்டம் நிறைவடைந்தது.

– ACJU Media –

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன