வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் புரியுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வேண்டிக்கொள்கிறது

ACJU/NGS/2024/394
2024.10.13 (1446.04.09)

தற்போது நமது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண காலநிலை காரணமாக நம் நாட்டு மக்கள் வெகுவாக பாதிக்கப்படைந்துள்ளார்கள் என்பதை நாம் அறிவோம்.

இந்த சூழ்நிலையில், பாதிக்கப்பட்டுள்ளோருக்கு இன, மத பேதமின்றி உதவிக் கரம் நீட்டி தம்மால் முடிந்த நிவாரண நடவடிக்கைகளைச் செய்வது இஸ்லாம் எமக்கு காட்டித்தந்துள்ள தார்மீக கடமையாகும்.

அந்த வகையில், எமது நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட, பிரதேச மஸ்ஜித் சம்மேளனங்களும், ஆலிம்களும் ஏனைய நலன்புரி அமைப்புகளோடு இணைந்து, அவ்வப்பிரதேச தனவந்தர்களுடைய உதவி ஒத்தாசைகளைப் பெற்று, பாதிப்புற்ற மக்களுக்கு உதவி செய்யுமாறும் அவர்களுக்கான தகுந்த நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

மேலும் இப்படிப்பட்ட இக்கட்டான நேரங்களில் அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்த இஸ்திஃபார், துஆக்கள் போன்ற விடயங்களில் மக்கள் ஈடுபடுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

 

அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ரிழா
பதில்த் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன