போதைப் பொருட்களிலிருந்து சிறார்கள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள், குடும்பங்கள், சமூகம், தேசம் என அனைவரையும் பாதுகாப்போம் என்ற தலைப்பில் எதிர்வரும் 03.06.2022 ஆம் திகதி நடைபெறும் குத்பாப் பிரசங்கத்தை அமைத்துக் கொள்வோம்.

ACJU/NGS/2022/145

01.06.2022

சகல கதீப்மார்களுக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

போதைப் பொருள் பாவனை காரணமாக நம்நாட்டு மக்கள் பல நெருக்கடிகளுக்கும் பிரச்சினைகளுக்கும் சீரழிவுகளுக்கும் நாளுக்கு நாள் முகங்கொடுத்து வருவது நாம் அறிந்ததே.

அண்மையில் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையான ஒருவர் ஒரு சிறுமியை கொலை செய்த செய்தி நம்அனைவரையும் ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியது. இஸ்லாம் போதைப் பொருள் பாவனையை தடைசெய்துள்ளதுடன் இதற்கு எதிராக செயற்படுவது சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரின் பொறுப்பாகும் என்றும் போதித்துள்ளது.

ஆகவே, போதைப் பொருள் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதையும் இதனால் மக்களுக்கு ஏற்படும் விபரீதங்களையும் தெளிவுபடுத்தி எதிர்வரும் குத்பாக்களை அமைத்துக் கொள்ளுமாறு சகல கதீப்மார்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.

 

அஷ்ஷேக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா

 

அஷ்ஷேக் எம். அப்துல் முக்ஸித்
செயலாளர் – பிரச்சாரக் குழு
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன