ACJU/FRL/2025/47/466
2025.12.03 -1447.06.11
கௌரவ நிர்வாக சபைத் தலைவர்களுக்கும், கதீப்மார்களுக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறக்காத்துஹு
அண்மையில் தித்வாப் புயலால் ஏற்பட்ட கடும் மழை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் பல பகுதிகளில் பேரழிவுகளும் உயிர் சேதங்களும் ஏற்பட்டுள்ளன என்பதை நாம் அறிவோம். இதுபோன்ற மண்சரிவு அல்லது நீரில் மூழ்கி மரணமடைந்தவர்களுக்கு ஷஹீதின் நன்மை கிடைக்கும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
இது போன்ற சோதனைகள் நீங்குவதற்கு பின்வரும் முறைகளில் துஆப் பிரார்த்தனையில் ஈடுபடுமாறு அனைவரையும் ஜம்இய்யாக் கேட்டுக் கொள்கின்றது.
1. ஒவ்வொருவரும் தொழுகை, நோன்பு, ஸதகா, இஸ்திஃபார் மற்றும் துஆப் பிரார்த்தனையில் ஈடுபட்டுவதன் மூலம் அல்லாஹு தஆலாவின் அருளைப் பெற்று சுபீட்ச்சமான நிலையை அடைய முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்படல்.
2. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் அதிக மழை பொழிந்ததனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட போது அவர்கள் ஜுமுஆ குத்பாவில் அம்மழையை மக்களுக்கு பாதிப்பின்றி திசைத் திருப்ப அல்லாஹு தஆலாவிடம் பிரார்தித்ததைப் போன்று தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சோதனை நீங்க நாளை ஜுமுஆ குத்பாவில் (2025.12.05) பிரார்த்திக்குமாறு கண்ணியமிக்க கதீப்மார்களை வேண்டிக் கொள்கின்றோம்.
3. ஜுமுஆத் தொழுகையின் பின்னர் மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து துஆவில் ஈடுபடுதல். ஒருவர் துஆக் கேட்க மற்றவர்கள் அதற்கு ஆமீன் சொன்னால் அவர்களுடைய துஆ ஒப்புக் கொள்ளப்படும் என்ற ஹதீஸ் ‘முஸ்தத்ரக் அல் ஹாகிம்’ என்ற கிரந்தத்தில் பதிவாகியுள்ளது.
துஆப் பிரார்த்தனையில் பின்வரும் துஆக்களையும் சேர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
اللهم حوالينا ولا علينا
اللَّهُمَّ إنِّا نعوذُ بِك مِنْ الْهَدْمِ وَالتَّرَدِّي وَ نعوذُ بِك مِنْ الْهَرَمِ، وَالْغَرَقِ
முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை
அஷ்-ஷைக் எம்.ரீ.எம் ஸல்மான்
பதில் செயலாளர் – ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை


