2026 ஏப்ரல் 02ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மகளிர் விவகாரப் பிரிவின் ஏற்பாட்டில் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் குறித்த ஜம்இய்யாவின் நிலைப்பாடுகள் மற்றும் முன்னெடுப்புகளை ஆலிமாக்கள் மற்றும் துறை சார்ந்த பெண்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு வெள்ளவத்தை தர்பிய்யதுல் பனாத் மகளிர் அரபுக் கல்லூரியில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில், முஸ்லிம் விவாக விவாக ரத்து சட்டம் தொடர்பிலும் அதில் திருத்தங்களை மேற்கொள்வதில் நீண்டகாலமாக நிலவும் சர்ச்சைகள் தொடர்பிலும் தெளிவுகள் வழங்கப்பட்டதுடன் இவ்விவகாரம் குறித்த ஜம்இய்யாவின் நிலைப்பாடுகள் மற்றும் முன்னெடுப்புகள் குறித்தும் விளக்கமிக்கப்பட்டது.
இதில் தர்பிய்யதுல் பனாத் மகளிர் அரபுக் கல்லூரியில் கற்பிக்கும் ஆலிமாக்கள் மற்றும் முஸ்லிம் சமூகத்திலுள்ள துறை சார்ந்த பெண்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
இந்நிகழ்வில், ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் எம். முர்ஷித் முலப்பர் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டதுடன் மகளிர் விவகாரப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் சிராஜ், அஷ்-ஷைக் மௌலானா ஸப்ராஸ், அஷ்-ஷைக் நுஃமான், அஷ்-ஷைக் ஸல்மான், அல்-ஹாஜ் லியாகத், அஷ்-ஷைக் ஸபருல்லாஹ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


– ACJU Media –


